மாணவர்கள் விடுத்த கெடு..! பதவி விலகிய நீதிபதி..! கலவர பூமியாக மாறிய வங்கதேசம்..!!
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாணவர்களுக்கு இடையேயான வன்முறை ஏற்பட்டுள்ளது., அந்த வன்முறையின் நேற்று 91 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் இந்த வன்முறைக்கான காரணம் குறித்தும் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்திற்காக உயிரை விட்டவர்களுக்கும்., சுதந்திர போராடத்திற்காக பாடுபட்டவர்களுக்காக 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் அமைப்பினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தியுள்ளனர்.. அதில் வன்முறை வெடித்துள்ளது. அந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த போராட்டங்களை ஒடுக்க வங்கதேசம் அரசு எடுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வராததால் மாணவர்களுடனான போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அது காட்டு தீ போல பரவியது.. இதனால் ஹசீனா வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம், அந்நாட்டின் இராணுவத் தளபதியான ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைப்பதாக அறிவித்தார்.
இதனால் ஆகஸ்ட் 5ம் தேதி இரவு வங்கதேசம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இடைக்கால ஆட்சியை அமைந்துள்ளதை தொடர்ந்து ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது மட்டுமின்றி பதவியையும் ராஜினாமா செய்தார்..
இந்நிலையில் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதை தொடர்ந்து தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..