சூதாட்டம் என்பது மரத்தின் அடியில் அமர்ந்து கட்டம் கட்டி விளையாடினாலும் சரி தொழிநுட்ப வளர்ச்சியின் அப்கிரெடான ஆன்லைன் சூதாட்டமாக இருந்தாலும் சரி அளவிற்கு மீறும் பட்சத்தில் அதற்காக எந்த தவறையும் துணித்து செய்யும் அளவிற்கு அடிமையாக்கிவிடும். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா உருவாக்கப்பட்டு ஆளுநரின் அனுமதிக்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் லூடோ ஆட்டத்தில் அடிமையாகி தனது வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடமானம் வைத்து விளையாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லூடோ என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு கொரோன ஊரடங்கில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த போது குடும்பங்கள் நண்பர்கள் என அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சுவாரஸ்யமாக விளையாடிதான் பலருக்கும் நாட்கள் கழிந்திருக்கும். லூடோ விளையாட்டின் சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒரு ஒருவருக்கும் ஏதேனும் ஒரு நிற காய்கள் வழங்கப்படும். குறைந்தது ஒருவருக்கு 4 காய்களுடன் தொடங்கும் இந்த ஆட்டம் அவர்களின் இறுதி இடமான ஒரு வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதே இதன் முக்கிய கரு ஆகும். இடையில் மற்றவர்களின் ஆட்டத்தின் வேகத்தை குறிப்பதற்கு அவர்களின் காய்களை வெட்டி அவர்களை மீண்டும் தொடக்க புள்ளிக்கு அனுப்புவது இந்த ஆட்டத்தின் தந்திரம். இவ்வளவு சுவாரஸ்யமான இந்த விளையாட்டில் அடிமையாகாமல் இருப்பது கடினம் என்றாலும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை போல் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
உதிர்ப்பிரதேஷத்தில் உள்ள ஒரு தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக ஆறு மாதத்திற்கு முன் அவரது கணவர் ஜெய்ப்பூர் சென்றுள்ளார். இதனால் மனைவி வீட்டின் உரிமையாளருடன் லூடோ விளையாடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். முதலில் பொழுது போக்கிற்காக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் பணத்தை வைத்து சூதாடும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் இருவரும் பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் லுடோவிற்கு அடிமையான அந்த பெண்ணிற்கு சூதாட பணம் இல்லாமல் இருந்துள்ளது. பணம் இல்லை என்று ஆட்டத்தை கைவிடாமல் உரிமையாளரிடம் தன்னையே அடமானம் வைத்து சூதாடி விளையாடியுள்ளார்.
இந்த விஷயம் கணவருக்கு தெரிய வர அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த காவல் துறை விளக்கமளிகையில், தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் மேலும் அவரை தொடர்பு கொண்ட பிறகு அவரிடம் இது குறித்தான விசாரணை நடப்படும் என்று தெரிவித்துள்ளது.