ஹரியானா தேர்தல்.. வினோஷ் போகத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்தும் காங்கிரஸ்..
ஹரியானா மாநிலத்திற்கான சட்டசபை பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடக்க உள்ள இந்த தேர்தலின் முடிவுகள், 8-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளன.
90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில், 45 தொகுதிகள் வெற்றி பெற்றால் மெஜாரிட்ட பெற்று ஆட்சியமைக்க முடியும். இந்நிலையில், 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, காங்கிரஸ் கட்சி, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில், ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சரான புபேந்திர சிங் ஹூடாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், அவர் கர்ஹி சாம்பலா-கிலோய் என்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவர் மட்டுமின்றி, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தம் போட்டியில், 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால், பதக்கத்தை தவறவிட்ட வினோஷ் போகத்தும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர், ஜுலானா தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.