ஹரியான தேர்தல் முடிவுகள்…!! முன்னிலையில் இருக்கும் கட்சி..? காலை நிலவரம்…!!
கடந்த அக்டோபர் 5ம் தேதி ஹரியானாவில் ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 89 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 89 இடங்களில் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும்., ஜேஜேபி – ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணியில் ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டியிட்டது.
ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டியிட்டது. ஆம் ஆத்மி – 88 இடங்களில் போட்டியிட்டது. ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது வரை 68 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஹரியனாவில் நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த செப்டம்பர் 18 ம் தேதி நடைபெற்றது.. அதில் மொத்தம் 61.1% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன் பின் 2ம் கட்ட தேர்தலானது 26 தொகுதிகளில் கடந்த செப்டம்பர். 25-ந் தேதி நடைபெற்றது.. அதில் 57.3% வாக்குகள் பதிவாகின.
அதனையடுத்து 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் 67% வாக்குகள் பதிவானது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தனியாகவும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் போட்டியிட்டன.
ஜம்மு காஷ்மீரில் தனி மெஜாரிட்டியை தொடும் காங்கிரஸ் கூட்டணி. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி 49 தொகுதிகளில் முன்னிலை. பாஜக 29 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 6 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் முன்னிலை. ஆட்சியமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..