பயிறு வகைகளை ஏன் முளைக்கட்டி சாப்பிடுகிறோம்..??
பயறு வகைகளை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் அதனை முளைக்கட்டிய வடிவில் சாப்பிடும்போது அது அதிகமான சத்துக்களையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
காலையில் உடலுக்கு சத்தான உணவு சாப்பிட வேண்டும் அல்லது மாலையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் முளைக்கட்டிய பயிறை சாப்பிடுவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
முளைக்கட்டிய பயிறை வேகவைத்து அதில் வெங்காயம், எலுமிச்சை சாறு, தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். முளைக்கட்டிய பயிறில் அதிகமான நார்சத்தும் புரதச்சத்தும் இருக்கின்றன. அதிலும் பயிறை வேகவைக்காமல் அப்படியே சாப்பிடும்போது அதில் அதிகமான கால்சியம், வைட்டமின்கள், மினரல்ஸ், புரதம் ஆகியவை அடங்கியுள்ளது.
முளைக்கட்டிய பயிறு எளிமையாக ஜீரணம் ஆகும். இதில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை இழப்புக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது வயிறு நிரம்பிய உணர்வை தந்து பசியை குறைக்கிறது. முளைக்கட்டிய பயிறை மலச்சிக்கல், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனாக இருப்பவர்கள் இதனை சாப்பிடுவது நன்மை அளிக்கும்.
முளைக்கட்டிய பயறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை சாப்பிடாதவர்கள் முளைக்கட்டிய பயிறை சாப்பிடலாம். இதன் வழியாக இதில் இருக்கும் புரதங்களையும் அடையலாம்.
பழங்களை விட முளைக்கட்டிய பயறில் அதிகமான நார்ச்சத்து உள்ளது ஆனால் பழங்களின் விலை அதிகமான உள்ளதால் முளைக்கட்டிய பயிறை எளிமையாக செய்து சாப்பிடலாம்.
உடல் பலமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாகும். இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.