கங்காரு எலிகள் நீங்கள் பார்த்தது உண்டா..? அவை எங்கு வாழும் தெரியுமா..? தெரிவோம் அறிவோம்-21
வட அமெரிக்காவில் உள்ள வறண்ட பாலைவனத்தில் தான் கங்காரு எலிகள் அதிகம் வாழுகின்றன. இவை ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவை போல பின்னங்கால் களை தாவி.., தாவி செல்லும். அதாவது கங்காருவை போல இவைகள் செல்லும்.
எனவே தான், இந்த வகை எலிகளை கங்காரு எலிகள் என்று அழைக்கிறோம். இந்த வகை விலங்குகள் பருப்பு விதைகளை மட்டுமே அதிகம் எடுத்துக்கொள்ளும். மற்ற உயிரினங்களை போல் இவை எப்பொழுதும் வெளியே சுற்றுவதில்லை.
எப்பொழுதும் இந்த வகை எலிகள் அதன் பொந்தின் உள்ளேயே தான் இருக்கும். எனவே அதற்கு தேவைப்படும் உணவுகளை முன்னதாகவே சேமித்துக் கொள்ளும். முக்கியமாக இந்த பருப்பு விதைக்கள் கிடைத்தாலும் அவை உடனே சாப்பிடுவதற்கு எடுத்துக் கொள்வதில்லை.
அந்த விதைகளை மண் தோன்றி புதைத்து.., ஈரப்பதம் ஏறிய பின்னரே எடுத்துக்கொள்ளும் அதற்கு காரணம் இந்த உயிர்னங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதால். இந்த வகை உயிரினங்கள் தண்ணீரே குடிக்காதாம், அந்த மண்ணில் புதைக்கும் விதையின் தண்ணீர் மட்டுமே போதுமானது.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..