ADVERTISEMENT
ஆளுநருக்கு முடிவு கட்டப்படுமா..!! ஆளுநரை தாக்கிய ரகுபதி..!!
ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாக தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனி ராஜ்ஜியம் நடத்துவதாக சாடிய அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு ஆளுநருக்கு தனி ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.
பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை என குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.