ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என துரை வைகோ விமர்சனம்…
ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்கு தகுதியானவர் அல்ல, அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு தான் தகுதியானவர் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது.
அதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இணை அரசை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்கு தகுதியானவர் அல்ல அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு தான் தகுதியானவர் என விமர்சித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,திருச்சியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்தார்.