நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இன்று மாலை அந்த படத்தின் முதல் பாடல் வெள்யாவுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் பேட்டி அளித்துள்ளார் அதில், இந்த படத்தில் நடிகர் அஜித் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படம் பொங்கலுக்கு வெள்யாவுள்ளது இதோடு போட்டி போட நடிகர் விஜயின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. வாரிசு படுக்குழு தொடர்ந்து அப்டேட்டகளை வழங்கி வரும் துணிவு படத்தின் படக்குழு அமைதியாக இருந்து வானத்து இந்நிலையில் இன்று மாலை அனிரூத் பாடிய அப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா பாடல் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் அச்.வினோத் அளித்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.
அதில் அவர் கூறுகையில், துணிவு படம் சமூக கருது சொல்லும் படம் அல்ல இது ஒரு முழு ஆக்சன் திரைப்படம். குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த படத்தில் இதுவரை காணாத அஜித்தின் நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரி போன்றவற்றில் பல மாற்றங்களை நீங்கள் காண போகிறீர்கள் அவர் என்று கூறினார். மேலும், அவர் பேசுகையில், இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடிகர் அஜித் எந்தவொரு டூப் களையும் பயன்படுத்தாமல் தானே நடித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகியுள்ளது.