“மக்களுக்கும் காசிக்கும் இடையே தனித்துவமான அன்பு உள்ளது-பிரதமர் மோடி”
தமிழக மக்களுக்கும் காசிக்கும் இடையே உள்ள அன்பு தனித்துவமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் பதிப்பின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, உலகின் பிற நாடுகளில் தேசத்திற்கு அரசியல் வரையறை இருந்தாலும், இந்தியா ஆன்மீக நம்பிக்கைகள் நிறைந்த தேசமாக உள்ளதாக கூறினார்.
தமிழக மக்களுக்கும் காசிக்கும் இடையே உள்ள அன்பு தனித்துவமானது என்றும், காசி தமிழ்ச் சங்கத்தின் குரல் உலகம் முழுவதும் பரவுவதாகவும் அவர் கூறினார்
முன்னதாக, பிரெய்லி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் நூல்கள் குறித்த பல்வேறு புத்தகங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதேபோல், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கம் விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.