எனது மகன்கள் தலைமறைவாக இல்லை.. வீண் அவதூறு வேண்டாம் என மனோ மனைவி வேண்டுகோள்..!
பிரபல பிண்ணனி பாடகர் மனோ அவர்களின் இரண்டு மகன்கள் சிறுவர்களை தாக்கியதாக வந்த விவகாரத்தில், மனோ அவர்களின் மனைவி ஜமிலா அவர்கள் எனது மகன்கள் தலைமறைவாகவும் இல்லை, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை எனவும், தேவையில்லாத அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மது குடித்துவிட்டு சிறுவர்களை தாக்கிய தகராறில் மனோ அவர்களின் மகன்கள் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மனோ மகனின் நண்பர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மனோவின் மகன்கள் உட்பட 3 பேர் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த பிரச்சனையில் மனோ அவர்களின் மனைவி ஜமிலா தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து, என்னையும் எனது மகன்களையும் அவர்களுடைய நண்பர்களையும் 10க்கும் பேற்ப்பட்ட கும்பல் தாக்கியதாகவும் இதில் எனக்கும் எனது மகன்கள் மற்றும் அவர்களது மகன்களுக்கு காயம் ஏற்ப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் எங்களுடன் தகராறில் ஈடுபட்டவர்களின் மீது தாய் உணர்வு கொண்டு அவர்களை போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டாம், அப்படி அளித்தால் அவர்களின் வாழ்க்கை வீணாகி விடுமே என்ற எண்ணத்தில் புகார் அளிக்கவில்லை என கூறினார்.
எனது மகன்கள் தவறான அவதூறுகளின் அவமானத்தில் எங்கு சென்றார்களே என தெரியவில்லை மேலும் எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும் எனது மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகனின் நண்பணுக்கு விலா எலும்புகள் உடைந்துள்ளதாகவும், எனக்கு கை மற்றும் முகத்தில் காயமும், மகனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் குடிகொண்டு நல்ல பெயரை பெற்றுள்ளதகவும் அவற்றை கொஞ்சம் நினைவில் கூர்ந்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.