ADVERTISEMENT
பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குகிறதா..??
பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் (d-k-sivakumar) விமர்சித்துள்ளார்
பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் கடந்த வெள்ளியன்று குண்டுவெடித்தது.
இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடித்த வழக்கில் சந்தேகப்படும் நபர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யக் கூடாது என கேட்டுகொண்டார்.
மங்களூரு குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் எந்தவித தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய தகவலை அடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என காவல்துறையினார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து கர்நாடக உள்துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.