“அண்ணா என்று சொல்லியும் கருணை பார்க்கவில்லை..” மனோ மனைவி மீது குற்றச்சாட்டு..!!
பிரபல பிண்ணனி பாடகர் மனோ அவர்களின் இரண்டு மகன்கள் இளைஞர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. தற்போது பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை அளித்த பேட்டியில் “மனோவின் மகன்களால் என்னுடைய மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது. என் மகனை கதற கதற அடித்திருக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க அளித்த பேட்டி காண்போரை நெஞ்சை பதபதக்க வைத்துள்ளது..
பிரபல பின்னணி பாடகர் மனோ சென்னை புரசைவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின்ரோடு பகுதியில் வசித்து வரும் நிலையில் செப்டம்பர் 12ம் தேதி இரவு மனோவின் மகன் சாகீர் மற்றும் ரபீக் ஆகிய இரண்டு பேரும் அவர்களது வீட்டின் கீழ் அவர்களது நண்பர்களோடு நின்று பேசிக்கொண்டு இருந்தபோது எதிரே இருந்த கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்.. மனோவின் வீட்டை பார்த்தப்படி நின்றுள்ளனர். அப்போது மனோவின் மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கால்பந்து வீரர்களான ரித்திஷ் மற்றும் கிருபாகரனை தாக்கியுள்ளனர்..
மேலும் அந்த இளைஞர்களை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.. அப்போது தாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.. அப்போது அந்த இளைஞர்கள்.. “அண்ணா வலிக்குது அண்ணா, விட்டுங்க அண்ணா இனி இந்த பக்கம் வரமாட்டோம் அண்ணா என கண்ணீருடன் கேட்டும்.. மனோவின் மகன்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் மனோ மகனின் நண்பர்கள் இரண்டுபேரை காவலர்கள் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாகவுள்ள மனோவின் மகன்கள் சாகீர் ராபீக் மற்றும் அவரது நண்பர் 3 பேரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்..
பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அளித்த பேட்டி :
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தந்தை அளித்த பேட்டி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது…
ஒரு பிரபலத்தின் மகன்கள் இப்படி ஒரு வேலையை செய்யலாமா..? என் மகன்கள் மீது அப்படி என்ன ஒரு வன்ம தாக்குதல். இன்று தான் நான் என் மகன்கள் வீடியோவை பார்த்தேன் மனது உடைந்து விட்டது.. என் மகன்கள் அடி வாங்கும் போது கூட அம்மா, அப்பா என்று கத்தல ஐயோ அண்ணா விட்ருங்கண்ணா.. அண்ணா அடிக்காதீங்க அண்ணா வலிக்குது., இனி நாங்க இங்க வரமாட்டோம் அண்ணா ப்ளீஸ் அண்ணா… என்று தான் கண்ணீருடன் கதறினார்கள்.
ஒரு சின்ன பையன் என்று கூட பார்க்காமல் அவனை இப்படி போட்டு அடிக்கலாமா..? அவன் வயசு என்ன..? அவனால் உங்களை எதிர்த்து நிற்க முடியாது தெரிஞ்சுட்டு இப்படி உங்க வன்மத்தை காட்டுரிங்க.. நான் இதுவரைக்கும் என் மகன்களை அடிச்சது கூட கிடையாது.. அவங்க ஏதாவது தப்பு பண்ணா கூட நான் அவனுங்கள மொறைக்க மட்டும் தான் செஞ்சு இருக்கன் ஆனா இப்போ என் மகன்கள் இந்த நிலமையில பாக்கிற அப்போ என் மனசு வலிக்குது..
இப்படி தப்பு செய்யுற மகன்களுக்கு பாடகர் மனோவின் மனைவி சப்போர்ட் செய்வது சரியா..? நான் அந்த அம்மாவிடம் சில கேள்விகள் மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.. உங்கள் மகன்கள் மீது தப்பு இல்லை என்றால் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் எதிர்த்து நின்று பேசலாமே.., என் மகன்கள் மீது மட்டுமே நீங்கள் தவறு என்று சொல்லுறீங்க.. சரி நீங்க சொல்லுற படியே இருக்கட்டும்.. அப்போ உங்க மகன்கள் தான் முதலில் போலீஸில் புகார் கொடுத்திருக்க வேண்டும்..? ஏன் செய்யவில்லை..? உங்கள் மகன்கள் என் மகன்களை தாக்கிய வீடியோ அனைத்து நியூஸ் சேனல்களிலும் வெளியானது.. உங்கள் கணவர் ஒரு பிரபல பாடகர் அவருடைய மகன்கள் தாக்கப்பட்டிருந்தால் ஒருவர் கூடவா போட்டோ எடுத்து இருக்க மாட்டாங்க..? நீங்க அழுது வீடியோ போடுவதை போல நான் போட மாட்டேன்.. ஆனா என் மகன்களை இப்படி பார்க்கும் போது என் உயிர் போகும் வலியை அனுபவிக்கிறேன்.. இந்த நிலைமை எந்த தந்தைக்கும் வரக்கூடாது.. உங்களிடம் இருக்கும் பணபலத்தை வைத்து நீங்கள் எதை வேணாலும் செய்வீங்க.. எனக்கு தெரியும் ஆனா உண்மை அப்படி ஆகாது என பேட்டி அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..