நட்பு என்ற உறவில் சேர்ந்த அவன்..! எழுத்து கிறுக்கச்சி – கவிதை-10
நட்புக்குள் பொய்கள் இல்லா விட்டாலும்
அவன் நட்பில் ஒரு புரிதல் இருக்கும்..
யாரிடமும் விட்டு கொடுக்காத ஒரு அன்பு..
ஆனால் எனக்காக எதையும் விட்டு கொடுக்கும்..
ஒரு ஆணின் நட்பில் பெண் இணைந்தால்
அவளை ஊர் என்ன சொல்லும்..
எதற்கும் கவலை இல்லை என சொல்லுபவன்..
அந்த பெண் கணவன் வீட்டிற்கு செல்லும்போது
அவளுக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்வான்..
நட்பு என்ற உறவில் சேர்ந்த அவன்..,
அவளின் குழந்தையை கையில் ஏந்தும் போது
மாமா என்று சொல்லி பெருமை படுவான்..,
எதோ ஒரு சந்திப்பில் இணையும் நட்பு என்ற உறவு.., குடும்ப உறவாக இணையும் என்றால் அந்த நட்பில் ஒரு விதமான புரிதல் உள்ளது.., அது எல்லோருக்கும் புரிந்து விடாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..