ADVERTISEMENT
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது-“பொன்முடி”
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் வீதம், ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வுக் கட்டணம் தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த கட்டன விகிதம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது என கூறினார்.
விரைவில் அனைத்து துணைவேந்தர்களையும் அழைத்துப் பேசி அடுத்த ஆண்டு முதல் ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், மாணவர்கள் இந்த செமஸ்டருக்கு வழக்கமாக செலுத்தி வந்த தேர்வு கட்டணத்தை செலுத்துமாறும் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.