பயத்தில் இருக்கும் பாஜக..!! மல்லிகார்ஜுன கார்கே சொன்ன அந்த வார்த்தை..?
தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிடுவதற்கு நான்கு மாத கால தாமதம் ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலுன், தேர்தல் பத்திரம் குறித்து வெளியிட்டால் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்கிற பயத்தில் பிரதமர் மோடியின் அரசு இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மோடியின் அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100% வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவேண்டும் என அவர் கூறினார்.
