மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது…
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில், காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் காவிரி தொடர்பாக வழியுறுத்தி பேசினர்.
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் வலிவுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ADVERTISEMENT
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை என தெரிவித்தார்.
மேகதாது அணை குறித்து விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த அவர், காவிரி ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்க வேண்டும் என கூறினார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.