திமுக – காங்கிரஸ் கூட்டணி..!! செல்வபெருந்தகை வெளியிட்ட அந்த முக்கிய அப்டேட்..?
திமுக காங்கிரஸ் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.
அதற்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் “40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற 2024 மக்களவை தேர்தலின் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் முடிவு செய்யப்பட்டு அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி என்றும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் விபரங்கள்
திமுக – 21,
காங்கிரஸ் – 9 + புதுச்சேரி
விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ – 2
சிபிஎம் – 2
மதிமுக -1
இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)
கொமதேக – 1 (நாமக்கல்)
மேலும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.