நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…
திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவையில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் நேற்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, திருப்பூர் நகராட்சிக்கு உட்பட்ட நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆலோசனைக் கூட்டம், உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் உதவி ஆணையர், கடை மற்றும் நகை அடகு கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியமானது எனவும், கேமராவில் பதிவாகும் காட்சிகளை தினந்தோறும் பார்வையிட்டு, அதில் சந்தேகத்திற்குரியவர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.