மனு அளிக்க சென்ற மாற்றுதிறனாலி..!! முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த உறுதி..!!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விருதுநகர் சென்றுள்ளார்.
முன்னதாக விருதுநகர் மக்களை சந்தித்து அவர்களிடம்., இதுவரையில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்கள் குறித்தும்., மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டரிந்தார்..
அப்போது அப்பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.. அதன் பின்னர் அவரது ஆட்சி குறித்தும் இதுவரையில் செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
அதன் பின்னர் விருதுநகர் கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று தொழிலாளர்களை பாராட்டினார்..
மேலும் தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் காரில் வந்துக்கொண்டிருந்த போது., ஊனமுற்ற நபர் ஒருவர் மனு அளிக்க வந்த போது., காரில் இருந்து இறங்கி அந்த மனுவை பெற்று உங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்..
அவர்களோடு நகர்புறத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..