கொரோனா வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை – விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காஞ்சிபுரம் இன்ஜினியரின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதில் இருக்கும் சந்தேகங்கள் பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் யோகி பாபு நடிப்பில் குறும்படம் வெளியாகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

What do you think?

பங்குச்சந்தையை வீழ்த்திய கொரோனா வைரஸ்!

மாஸ்டர் second single – குத்து போட ரெடியா?