சிம்பலான அரிசி மாவு தோசை…!
பச்சரிசி 1 கப்
வேகவைத்த சாதம் 1 கப்
துருவிய தேங்காய் 3/4 கப்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
எண்ணெய் தேவையானது
பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் ஊறவைத்த அரிசி , சாதம், தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
அதற்கு பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை வைத்து சூடு செய்து தோசை ஊற்றி எண்ணெய் தடவி வேக வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சிம்பலான அரிசி மாவு தோசை தயார். இத்துடன் தக்காளி சட்னி, தக்காளி தொக்கும் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.