சக்கரைவள்ளி கிழங்கு பஜ்ஜி..ஸ்நாக்ஸ்..!
தேவையான பொருட்கள்:
- 15சலைஸ் சக்கரைவள்ளி கிழங்கு
- 1 கப் கடலை மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை சமையல் சோடா
- தேவைக்கு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம்
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
சக்கரைவள்ளி கிழங்கை முதலில் தோல் சீவி சுத்தமாக கழுவி பஜ்ஜி போடும் பதத்திற்கு நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் கிழங்கை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் மெதுவாக போட்டு மிதமான தீயில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சக்கரைவள்ளி கிழங்கு பஜ்ஜி தயார். இத்துடன் தேங்காய் சட்னி சாப்பிட சூப்பராக இருக்கும்.