சத்தான கற்றாழை தொக்கு இன்னிக்கு நைட் செய்ங்க..!
கற்றாழை _1 கீற்று
கடலைப்பருப்பு_ 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் _2 ஸ்பூன்
கடுகு _ 1/4 ஸ்பூன்
வெந்தயம்_ 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை_1கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
பூண்டு _10 பல்
புளி _ சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் _1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
நல்லெண்ணெய் _2 ஸ்பூன்
கடுகு _1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு _1ஸ்பூன்
கருவேப்பிலை _சிறிது
கற்றாழையை வெட்டி அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வாணலில் நல்லெண்ணெய் விட்டு கற்றாழை ஜெல்லை போட்டு வதக்கி உப்பியதும் தனியே எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் கடலைப்பருப்பு, கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை ,வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு வதக்கிய கற்றாழை ஜெல்லையும் போட்டு வெங்காயத்தூள் மற்றும் ஊறவைத்த புளியும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்த பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான சுவையான கற்றாழை தொக்கு தயார்.
