பன்னீர் கட்லெட் செய்து இருக்கீங்களா.. இன்னிக்கு ஈவினிங் ட்ரைப் பண்ணுங்க…!
உருளைக்கிழங்கு 4
பன்னீர் ஒரு கப்
வெங்காயம் 1
உப்பு தேவையானது
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
எலுமிச்சம்பழம் 1 மூடி
கார்ன்ஃபிளவர் மாவு 1/2 கப்
பிரட் கிரம்ஸ் 1/2 கப்
எண்ணெய் பொரிக்க
உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பன்னீர், கார்ன்பிளர் மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
பின் அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கார்ன்பிளர் மாவு சிறிது உப்பு கலந்து நீரில் கரைத்துக் கொள்ளவும்.
பின் தயாரித்த கட்லெட்டை மாவில் முக்கி பின் பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானது கட்லெட்டை போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் கட்லெட் தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.