ஆடி கிருத்திகைக்கு இத செய்து படைங்க..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அரை கப்
பாசிப்பருப்பு கால் கப்
நெய் அரை கப்
ஏலக்காய் தூள்
பச்சை கற்பூரம் பொடி சிட்டிகை
ஜாதிக்காய் பொடி சிட்டிகை
உப்பு சிட்டிகை
முந்திரி,திராட்சை
வெல்லம் 1 கப்
தண்ணீர் 3 கப்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை லேசாக வருத்து அதனை அரிசியுடன் சேர்த்து, அரிசிக்கு ஒன்னுக்கு மூன்று பங்கு தண்ணீரும்,பருப்புக்கு ஒன்னுக்கு மூன்று பங்கு தண்ணீரும் சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
பின் இதனை ஒரு குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை தனி பாத்திரத்தில் வைத்து சூடு செய்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும்.
பின் வேகவைத்த அரிசி பருப்புடன் வெல்லக் கரைசலை சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் ஏலக்காய்த்தூள்,ஜாதிக்காய்பொடி,பச்சை கற்பூரம் பொடியை போட்டு நெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சையை அப்படியே நெய்யுடன் சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுதான் தித்திப்பான சர்க்கரை பொங்கல் தயார். இதை இன்னிக்கு முருகருக்கு படையல் போடுங்க..