அசாமில் தொடரும் கனமழை..! வெள்ளம் போல் காட்சி அளிக்கும் அசாம்..!!
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கனமழை காரணமாக அசாமில் இதுவரை 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. குவஹாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
இந்த கனமழையால் சாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறு மற்றும் பாலங்களில் நீர் நிரம்பியதால்.., ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கட்டடங்கள் இடிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அசாம் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள நேமதிகாட் பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது, பிரம்புத்திரா ஆறு மற்றும் பல்வேறு நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடு வதாகவும் அசாம் மாநில தெரிவித்துள்ளது.