கனமழை பாதிப்பு..! எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்..! கமிஷனர் அருண் உத்தரவு..!!
வங்கக் கடலில் வழுவெழுந்துள்ள பெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே காரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.. அதன்படி சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையில் கமிஷனர் அருண் தலைமையில் 39 காவல் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.. அதேபோல் சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் உள்ள ஒவ்வொரு குழுவிலும் 12 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..
சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் நொளம்பூர், மாதாவரம், புளியாந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேரில் சென்று அங்கு தயார் நிலையில் உள்ள மீட்பு குழுவினரை சந்தித்து பாதுகாப்பு பணிகள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதேபோல், சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் வேளச்சேரி, மடிப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அமைக்கப்பட்டள்ள சிறப்பு காவல் கட்டுப்பட்டு அறை ஆய்வு செய்து மீட்பு பணிகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ளம் மீட்பு தொடர்பாக வரும் புகார்களின் படி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..