தெலுங்கானாவை திசை திருப்பிய கனமழை..!! ரேவந்த் ரெட்டி போட்ட உத்தரவு..!!
தெலுங்கானாவின் காட்டு பகுதியில் சிக்கிக்கொண்ட மலைவாழ் மக்களின் மீட்டு., பெங்களுரூவில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் சுத்தம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்…
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா, திண்டி மண்டலம் கோனபோயினப்பள்ளி உட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது.. மேலும் துந்துபி ஆற்றின் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனை அறியாத துந்துபி மற்றும் நாகர் கர்னூல் பகுதி மலைவாழ் மக்கள் 10 பேர் காட்டுக்குள் சிக்கியுள்ளனர்..
கடந்த 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இவர்கள் கிராமத்திற்கு திரும்பாததால் கிராமமக்கள் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ வம்சிகிருஷ்ணா, தேவரகொண்டா எம்எல்ஏ பாலு நாயக் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் ட்ரோன் கேமரா உதவியுடன் அவர்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் நிலையை அறிந்து கொண்டு கயிற்றின் மூலம் அவர்களை இறக்கி மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்..
தெலுங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று அம்மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கான பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், நீர் பிடிப்பு பகுதிகள், ஏரி கால்வாய்கள், உட்பட்ட அனைத்து நீர் வழித்தட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுருதியுள்ளார்..
அதன் பேரில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சிர்கள் பார்வையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்.., தினமும் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..