தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வலிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.