அடுத்த 6 நாட்களுக்கு கனமழை அறிவிப்பு..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.., இரண்டு நாட்களாக மழை பெய்யாத நிலையில் மீண்டும் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக சில பகுதிகளுக்கு ரெட் அலார்ட் கொடுத்துள்ளது.
18/07/23 மற்றும் 19/07/23 :
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
20/07/23 முதல் 24/07/23 வரை :
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் கனமழையும் சென்னையில் மிதமான மழையும் சென்னயின் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு பருவ காற்று நிலவி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.