கன்னியாகுமரியில் கனமழை..!! மகிழ்ச்சியில் மக்கள்..
கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில்.., இன்று காலை கன்னியாகுமரியில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது..
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரியில் மழை எதுவும் பொழியவில்லை, எனவே மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் விதமாக.., இன்று காலை கனமழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில், ஒரு சில இடங்களில் கார் மேகம் சூழ சாரல் மழை பெய்துள்ளது.
ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கனமழை பெய்துள்ளது.
ஜூன் மாதம் முழுவதும் வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு இன்று சூரை காற்றுடன் கூடிய கனமழை பெய்து இருப்பது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த சாரல் மழை மகிழ்ச்சி கொடுக்கும் என்ற கோணத்தில் மக்கள் அனைவரும் மழையில் நினைந்த படி போட்டோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் ஹாப்பி வித் ரெயின் என்று பதிவிட்டும் வருகின்றனர்.