திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த கனமழை..!!
திண்டுக்கல் அருகே பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி. மேலும் தொடர்ந்து தோன்றிய இரட்டை வானவில்லை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல்
திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, மறவபட்டி, உலகம்பட்டி, குளத்தூர், உண்டார்பட்டி உள்ளிட்ட பலபகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தொடர்ந்து தோன்றிய இரட்டை வானவில் காண்போரை வெகுவாக கவர்ந்தது.