கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! துணை முதலைமைச்சர் உதயநிதி விளக்கம்..!!
தமிழத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது., வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் குறிப்பட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கிறது..
இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும்., உதவி மையத்தில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது..
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
- எனவே மழை நீர் தேங்காதபடி அவற்றை அகற்ற சக்திவாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது…
- அதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- மற்றும் சென்னையின் எந்த பகுதியிலும் சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை
- சென்னையில் ஒரு சுரங்கப்பாதை தவிர மீதமுள்ள 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது
மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 22,000 மாநகராட்சி பணியாளர்கள் பணியில் உள்ளனர். எனவே மக்கள் அச்சமின்றி இருக்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..