தமிழகத்தை வெளுத்த வாங்க காத்திருக்கும் கனமழை..!! மஞ்சள் அலார்ட் விடப்பட்ட மாவட்டங்கள்..!!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பெருமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்துவருகிறது.. இந்நிலையில் இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு அதாவது (11/08/24 முதல் 17/08/24)ம் தேதி வரை 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. குறிப்பாக சென்னையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7செமீ முதல் 11 செமீ வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 14, மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்.., சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..