தமிழகத்தில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாவே கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னையில். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, வால்பாறை , சோலையார், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
கடலில் பலத்த சூறைக்காற்று நொடிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..