தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு..?
தென்மேற்கு பெருமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் நேற்று மாலை முதல் பெய்த தொடர் கனமழையால் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
அதேபோல் சென்னையை பொறுத்தவரையில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
மேலும் தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..