தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்துவருகிறது.. நாளை பண்டிகை நாள் என்பதால் இன்று கனமழை பெய்து வருவது சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..