வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் மற்றும் பபுதுவையில் கடந்த இரண்டு மாதங்களாக மலை பொலிந்து வருகிறது. இந்நிலையில் பருவமழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் மீண்டும் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யயும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்தான அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆங்காங்கே மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும்19 மற்றும் 20ம் தேதி தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும் கரைகாளிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனும் அங்கங்கே லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.