குளிர்காலம் தொடங்கியாச்சு.. சளி, இருமலுக்கு இது போதும்..!
குளிர்காலங்களில் சூடாக டீ மற்றும் காபி குடிக்கவே விரும்புவார்கள் ஆனால் இது உடலை தற்காலிகமாக மட்டுமே சூடாக வைக்கும் இதற்கு மாற்றாக புதினா டீ, இஞ்சி டீ, சீரகம் டீ சேர்த்த டீ குடிக்கும்போது அது உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது.
அந்தவகையில் உடலை சூடாக வைக்கும் டீ வகைகளை பற்றி பார்க்கலாம்.
மூலிகை டீ என்பது ஆரோக்கியமான தாவரங்களில் இருந்து தயாரிக்கபடுவதாகும். இதில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகள் உள்ளதால் குளிர்காலங்களில் உண்டாகும் சளி, இருமல், தொண்டை புண் ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது.
புதினா டீ:
புதினா என்பது நறுமணம் நிறைந்த ஒரு மூலிகையாகும். இதில் இருக்கும் அதிகபடியான ஆண்டியக்ஸிடண்டுகள் குளிர்காலங்களில் வரும் காய்ச்சல், சளி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றில் உண்டாகும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
செய்முறை:
நான்கு டம்ளர் தண்ணீரில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பின் இறக்கி சிறிது நேரத்திற்கு வைத்திருந்து பின் வடிகட்டி தேவையெனில் இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி டீ:
இஞ்சியானது கார சுவை கொண்டுள்ளது. இது செரிமான நன்மைகளை அளிக்கிறது. வாந்தி, குமட்டல், அஜீரணம் ஆகியவற்றை சரிசெய்கிறது. இஞ்சியில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
செய்முறை:
இஞ்சியை நசுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக சாறு இறங்கியதும் வடிக்கட்டி அதில் சுவைக்கு தேன் கலந்து ஒரு நாளைக்கு இருவேளையிலும் குடிக்கலாம்.
பெருஞ்சீரகம் டீ:
பெருஞ்சீரகத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் குளிர்காலங்களில் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் செலினியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
செய்முறை:
தண்ணீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து சாறு இறக்கியதும் வடிக்கட்டி சுவைக்கு தேன் கலந்து குடிக்கலாம்.