குழந்தையை தாக்கும் “பைமோசிஸ்” சரி செய்ய தீர்வு இதோ..!
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. அந்த காலத்தில் 7, 8 குழந்தையை கூட அசரதமாக வளர்த்த நம் முன்னோர்கள் பரம்பரையில் வந்த நாம் ஒரு குழந்தையை வளர்பதற்கே அதிக கவனம் கொள்கிறோம்.
குழந்தையை குளிக்க வைப்பதில் இருந்து அவர்களுக்கு தரும் உணவு வரை.. மற்றவரிடம் கேட்டு கேட்டு தான் செய்ய வேண்டியுள்ளது. அப்படி எவ்வளவு தான் குழந்தையை பாரமரித்தாலும் சில சமயம் நோய் தாக்கி விடுகிறது.
அதில் இந்த கால குழந்தைகளை தாக்கும் ஒன்று “பைமோசிஸ்”. இவை எதனால் வருகிறது மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பெரியவர்கள் குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது, காதின் பின் புறம், கழுத்து பகுதி மற்றும் பிறப்பு உறுப்பு என அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்வார்கள்.
இந்த நோய் முற்றிலும் ஆண் குழந்தையை தான் பாதிக்கும். பிறந்து 8 மாதம் வரை ஆன குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது அவர்களின் பிறப்பு உறுப்பை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
பிறப்பு உறுப்பில் தோல் உரிந்து இருந்தால், கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். அதை அப்படியே விட்டால் அவர்கள் வளர்ந்த பின் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீர் கழித்த பின் wipes வைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதை கவனிக்காமல் விட்டால்.., ஒரு வயது ஆன பின் சிறுநீர் தொற்று நோய் ஏற்படும். எனவே குளிக்க வைக்கும் பொழுது ஆண் குழந்தைகளிடம் இதை கவனிக்க மறக்காதீர்கள்..
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி.