சுவையான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் நொடியில்….
சுட சுட மொறு மொறுவென்று மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்க அப்பறம் பாருங்க சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விடுவார்கள்.
கார்ன் பிரெட் டோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பள்ளி முடித்து பசியோடு வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடக்கூடிய அருமையான டேஸ்டியான ஒரு ரெசிபியை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பிடிச்சமான உணவு பொருட்களில் கார்னும் ஒன்றாகும். மேலும் அது ஆரோக்கியத்திற்கும் நல்லது. அப்படிப்பட்ட கார்ன் மற்றும் சீஸ் கொண்டு அருமையான சுவையில் சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் நொடியில் எப்படி செய்வது என்று இந்த பதின் மூலம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள்- 10 எண்ணிக்கை
சுவீட் கார்ன் வேகவைத்து – ஒரு கப்
சீஸ் துருவியது – ஒரு கப்
சில்லிபிலேக்ஸ்- ஒரு ஸ்பூன்
சீசனிங்- ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு கப்பிடி
டொமேட்டோ சாஸ்- தேவையான அளவு
மயோனிஸ்- தேவையான அளவு
செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி பின் அதனை வட்ட மூடிகளை கொண்டு வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அவற்றை ஒரு பிளேட்டில் வரிசையாக அடுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் துருவிய சீஸ், வேகவைத்த கார்ன், சில்லிபிளேக்ஸ், சீசனிங், மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள்
ஆகியவற்றை அடுத்து அடுத்தாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு வட்டமாக வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து முதலில் டொமேட்டோ சாஸ் தடவ வேண்டும் , பிறகு அதற்கு மேலே மயோனிஸ் தடவிக் கொள்ள வேண்டும்.
அப்பறம் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சீஸ் கார்ன் கலவையை எடுத்து பிரெட் துண்டில் வைக்க வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் , வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை வைத்து 10 நிமிடத்திற்கு மூடி போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து எடுத்தால் அருமையான , டேஸ்டியான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் தயார் ரெடி.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.