முதுமை தோற்றத்தை மறைத்து.. அழகான தோற்றம் பெற.. ஒரு ரகசியம்..!!
வெளிநாட்டில் இருந்து வந்து நம்மை வெகு விரைவாக கவர்ந்த பழங்களில் டிராகன் பழமும் ஒன்று.., பார்ப்பதற்கு கண்ணனுக்கு அழகாகவும், வாயிக்கு ருசியாகவும் இருக்கும் இந்த பழம் பல ஆரோக்கிய தன்மையையும் கொண்டுள்ளது.
இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கிறது. இது தோல் சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்யவும் உதவுகிறது, சருமத்திற்கு அழகான தோற்றம் கொடுப்பதோடு முகப்பரு வராமல் பாதுகாக்கிறது.
மேலும் பல குறிப்புகள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்..
வறண்ட சருமம் : தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் சருமம் விரைவில் வறண்டு விடும், இதை சரி செய்ய டிராகன் பழத்தை முகத்தில் தடவி வந்தால் வறண்ட சருமத்தை, மென்மையாக மாற்றுகிறது.
புற ஊதா கதிர்களால் ஏற்படும், கண் வீக்கம், கண் அரிப்பு, கண் கட்டி மற்றும் கண் சிவப்பு போன்ற வற்றில் இருந்து பாதுகாக்கிறது.
முகப்பரு : முகப்பரு உள்ள இடத்தில் டிராகன் பழத்தின் ஜெல்லை தடவி 20 நிமிடம் கழித்து, பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் முகப்பரு நீங்கி விடும்.
சரும பளபளப்பு : வாரத்திற்கு மூன்று முறை டிராகன் பழம் அல்லது டிராகன் பழம் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
முதுமை : தூக்கமின்மை, மனக்கவலை போன்ற காரணத்தால் சீக்கிரம் சருமம் முதுமை தோற்றத்திற்கு வந்து விடும், அதை சரி செய்ய டிராகன் பழம், தயிர், சேர்த்து கெட்டியாக கலக்கி கொள்ள வேண்டும்.
அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால், முதுமை தோற்றம் வருவதை தடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.