February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

“சேவை வரி விதிப்பது தவறு” – ஏ.ஆர்.ரஹ்மான் மனு!

பாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கும் திரைப்பட பாடல்களுக்கான காப்புரிமையை அவரே வைத்துக்கொள்வது வழக்கம். இசையமைப்பாளரே தன்னுடைய பாடல்களின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின்னர் அந்த உரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்கிவிட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசுக்கு எதிராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் என சுட்டிக் காட்டியுள்ளார். காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஜி.எஸ்.டி ஆணையர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

Digital Team

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

Digital Team

டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

superadmin

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு !

superadmin

கொரானா வைரஸ் : உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை

superadmin

பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை…!

superadmin
You cannot copy content of this page
Madhimugam