ஆடி தொடங்கியும் உயர்ந்த தங்கம் விலை..!!
கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆடி மாதம் தொடங்கி விட்டால் தங்கம் விலை குறைந்துவிடும் என நினைத்த மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து விற்கப்பட்ட நிலையில் இன்றும் குறையாமல் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5610 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 36,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 82 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 82,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையாமல் அதிகரித்து கொண்டு வருவது.., நகை பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.