சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!

சென்னையிலிருந்து மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டத்துக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் கார்பரேசன் மூலம் சென்னை – மைசூருக்கு அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து இதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. 435 கிலோ மீட்டர் தூரமுள்ள இவ்வழித்தடத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான இடம், தொழில்நுட்பம், பாதை, வழிவமைப்பு, செலவினம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான பணி தொடங்கி உள்ளது.

திட்டம் நிறைவடைந்து இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கினால், சென்னையில் இருந்து மைசூருக்கு செல்ல ஆகும் நேரத்தில் 2 மணி நேரம் குறையும் என கூறப்படுகிறது. அதாவது 6 மணி நேரமாக உள்ள பயண நேரம் குறைந்து, 3 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

What do you think?

கொரோனா வைரஸ் பீதியால் சொகுசு கப்பல் நுழைவதற்கு தாய்லாந்தும் தடை!

அமேசான் நிறுவனரின் பிரம்மாண்ட பங்களா; வெறும் 1,178 கோடி தான்!