பணிடிகை காலம் என்பதால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை அபராதம் விதித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் அரையாண்டு விடுமுறையென்று பயணிகள் இந்த பண்டிகை காலங்களில் சொந்த ஊர் சென்று திரும்புவது இயல்பான ஒன்று, ஏற்கனவே பண்டிகை காலம் என்பதால் பல ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது இதனால் பயணிகள் கடும் அவதியில் இருந்து வரும் நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுறைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் 49 தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்து துறையிடம் புகாரளித்தனர். புகாரை தொடர்ந்து அந்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் புகாரளித பயணிகளுக்கு ஆம்னி பேரூந்துகளிடம் இருந்து ரூ.9,200 வசூலித்து அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து 23ம் தேதி தொடங்கிய சோதனை வரும் 2ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.