இமயமலை ஒட்டியுள்ள மாநிலங்களின் கடும் பனிபொழிவு ஏற்பட்டு வருகிறது , ஆகையால் இமாச்சல்பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவு ஏற்பட்டு வருகிறது அதனை தொடர்ந்து அங்குள்ள 90க்கும் அதிகமான சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி, உத்திர பிரதேசம், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் இமாச்சல்பிரதேச மாநிலத்தில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால், பல இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு பனி படர்ந்து உள்ளதால் 90க்கும் அதிகமான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து, அந்த பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது. மேலும், அந்த பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலைகள் உட்பட 90 சாலைக்கள் பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிம்லா, மணாலி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் குறைந்தபட்சம் மைனஸ் 4 டிகிரியாக வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.