பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு – இந்து அமைப்பு அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய பெங்களூர் மாணவியை கொன்றால் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்ற கூட்டத்தில், இளம்பெண் ஒருவர் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினார். அப்போது, அந்த பெண்ணிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய ஓவைசி, அந்த பெண்ணுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார். தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி அமுல்யா, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு…!

இந்நிலையில், பெங்களூர் மாணவி அமுல்யாவை கொலை செய்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஸ்ரீராம சேனா அமைப்பு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சஞ்சீவ் மராண்டி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

கரோனா வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரிப்பு !

பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை…!