‘அரசியல் ஆதாயம்’ தன்னை தானே அரிவாளால் வெட்டி கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

அரசியல் ஆதாயத்திற்காக இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் தன்னை தானே அரிவாளால் வெட்டி கொண்ட வினோத சம்பவம்.

அரசியல் ஆதாயத்திற்காக பலரும் பல விதமான செயல்களை செய்வார்கள் என்று நாம் கேள்விபட்டிருக்கோம். ஆனால் திருப்பூரில் அரசியல் ஆதாயத்திற்காக ஒருவர் தன்னை தானே வெட்டிகொண்ட வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பகவான் நந்து எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தன்னை அடையாளம் தெரியாத சிலர் தன்னை அரிவாளால் வெட்டியதாகக் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் கை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகவான் நந்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பகவான் நந்துவின் வாகன ஓட்டுநர் ருத்ரமூர்த்தி என்பவர் அதிர்ச்சி வாக்கு மூலம் ஒன்றை திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் அளித்தார்.

அதில், அரசியல் ஆதாயம் தேட முயன்ற பகவான் நந்துவின் தன்னை கத்தியால் குத்த சொன்னதாகவும் அவரது கட்டளைக்கு ஏற்ப தான் அவரை வெட்டியதாக கூறிய ருத்ரமூர்த்தி மேலும் பகவான் நந்து தனக்குத்தானே இரு கைகளிலும் காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.

இதையடுத்து, பகவான் நந்து மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் சுயவிளம்பரத்திற்காக தனது சொந்த இருசக்கர வாகனத்தையே கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர்!

‘கொரோனா அச்சம்’ நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து!